Dash Remit - Dash செயலியில் உள்ள கைப்பேசிவழி பணம் அனுப்பும் சேவையாகும், இது சிறந்த நாணயமாற்று
விலைளைக் கொண்டது மற்றும் குறைவான, நிலையான கட்டணத்தில் இந்தியாவிற்குப் பணத்தை மாற்ற உதவுகிறது.
அதாவது, உங்கள் குடும்பத்தினருக்கான அவசரக்கால நிதியை எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும், உங்கள் இந்திய
வங்கிக் கணக்குக்கோ அல்லது பணமாக பெற்றுக்கொள்ளவோ அனுப்பலாம். உங்கள் பணம் பாதுகாப்பாகப் போய்ச் சேரும் என்பது
உறுதி!
எங்கள் பங்காளிக்கு Dash Remit மூலம்
பாதுகாப்பாகப் பணம் அனுப்புங்கள்
வணிகக் குறிகள், வணிகப் பெயர்கள் மற்றும் வணிகச் சின்னங்கள் ("லோகோக்கள்") ஆகியவை அந்தந்த உரிமையாளர்களின் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரைகளாகும். SingCash-ஐ இழிவுபடுத்தும் அல்லது வாடிக்கையாளர்களைக் குழப்பும் வகையில் SingCash-க்கு சொந்தமில்லாத எந்தவொரு நிறுவனம், தயாரிப்பு அல்லது சேவையின் தொடர்பில் அவற்றுடன் Dash-ஐ இணைத்துக்கூறவோ இசைவுதெரிவிக்கவோ அல்லது வேறு எந்த வகையிலும் SingCash வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தவோ கூடாது.


பாங்க் ஆஃப் பரோடா
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
ஆக்சிஸ் வங்கி லிமிடெட்
பேங்க் ஆஃப் இந்தியா
கனரா வங்கி
பெடரல் வங்கி லிமிடெட்
HDFC வங்கி லிமிடெட்
ஐசிஐசிஐ வங்கி லிமிடெட்
இந்தியன் வங்கி
கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட்
பஞ்சாப் நேஷனல் வங்கி
சவுத் இந்தியன் வங்கி
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
யெஸ் பேங்க் லிமிடெட்
ஏன் Dash Remit மூலம் பணம் அனுப்ப வேண்டும்?
உங்களுக்கு வசதியான நேரத்தில் எந்த இடத்திலிருந்தபடியும் உங்கள் கைப்பேசி மூலம் பாதுகாப்பான முறையில் சர்வதேச பணமாற்றங்களைச் செய்யமுடியும்.
ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சிறந்த நாணயமாற்று விலைகள் மற்றும் குறைவான கட்டணங்களைப் பயன்படுத்தி மகிழுங்கள்.
நீங்கள் சிங்கப்பூரில் பணிபுரிந்தவாறே ஊரிலுள்ள உங்கள் அன்புக்குரியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உறுதியான வழி இதுவாகும்.
பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான
உத்தரவாதத்துடன் பாதுகாப்பு மிக்கது.
சிங்கப்பூர் நாணய வாரியத்தால் உரிமம் அளிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது.
குறைந்த, நிலையான கட்டணம், சிறந்த நாணய பரிமாற்றம் விலைகள்
மறைவுக் கட்டணங்கள் எதுவுமில்லாமல் அதிகமாகப்
பணமாற்றம் செய்யுங்கள்
விரைவான பணப் பரிமாற்றம்
15 நிமிடங்களில் உங்கள் பணத்தைப் பெறுங்கள் பணம் எடுப்பதற்கு
அதிகம் சேமியுங்கள். அதிகம் பணம் அனுப்புங்கள்.
Dash அளிக்கும் குறைந்த பரிவர்த்தனைக் கட்டணங்கள் மற்றும் சிறந்த நாணய மாற்று விலைகள் மூலம் நீங்கள் பெறும் சேமிப்பைக் கொண்டு ஊரிலுள்ள உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அதிகமாகப் பணம் அனுப்புங்கள்.
(ஒரு பணமாற்றத்திற்கான நிலையான கட்டணம்)
*குறிப்பு: இங்கே பட்டியலிடப்பட்டுள்ள நாணய மாற்று விலை 29 செப்டம்பர் 2026, காலை 11 மணி அன்றைக்கு உரியது. சமீபத்திய நாணய மாற்று விலைக்கு Dash செயலியைப் பார்க்கவும்.
நாணயமாற்று விலைகள் மற்றும் தொகைகள் உட்பட இந்த இணையதளத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விவரங்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளன, மேலும் எந்த ஒரு நிகழ்விலும் Singtel மொத்தப் பணம் அனுப்பும் தொகை மற்றும் நாணயமாற்று விலையின் துல்லியத்திற்கு உத்தரவாதம் அளிக்காது. இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களை நீங்கள் நம்பியதன் விளைவாக ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு Singtel பொறுப்பேற்காது. நிகழ்நேர மாற்றங்களுக்கு உட்பட்டு, மிகவும் புதுப்பித்த தகவல்களுக்கு, தொடர்புடைய சேவை வழங்குநர்களுடன் தற்போதைய நாணயமாற்று விலைகளைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
இப்போதே Dash செயலியைப் பதிவிறக்குங்கள்சில எளிய படிகளில் பணம் அனுப்பத் தொடங்குங்கள்
Dash-ஐப் பதிவிறக்குங்கள்
App Store அல்லது Google Play Store-லிருந்து. Dash கணக்கிற்குப் பதிவு செய்யுங்கள்.
பணம் அனுப்புவதற்குப் பதிவுசெய்யுங்கள்
‘சிங்பாஸ்’ வழியாக பதிவுச் செயல்முறையை முடிக்கவும் அல்லது சேர்வுஒப்புகை செய்தவுடன் கைமுறையாகப் பதிவு
செய்யவும்
அல்லது
"Remit > Register for Remittance" என்பதைத்
தேர்வு
செய்யவும்.
முகவரிச் சான்றுக்கான எடுத்துக்காட்டுகள்:
- Singtel, M1, Starhub விலைச்சீட்டு (bill)அல்லது வேறு ஏதேனும் தொலைத்தொடர்பு நிறுவன விலைச்சீட்டு (bill)
- வங்கி அறிக்கை
- ஊழியர் தங்கும் விடுதி அட்டை/அனுமதி அட்டை
- நிறுவனத்தின் அலுவற்கடிதத்தாளில் வாடிக்கையாளரின் முழுப் பெயருடன் கூடிய வேலைநியமனக் கடிதம்
- வீட்டு வாடகை ஒப்பந்தம்
- சிங்கப்பூர் அரசாங்க நிறுவனத்திடமிருந்து கடிதம் (எ.கா. மனிதவள அமைச்சு)
- தண்ணீர் அல்லது மின் கட்டண விலைச்சீட்டு (bill)
ஒரு பெறுநரைச் சேர்க்கவும்
Select Remit > Add a Recipient
Dash இருப்புக்குப் பணம் நிரப்புங்கள்
Dash செயலியிலிருந்து, PayNow VPA / PayNow QR, அல்லது OCBC PayAnyone ஆகியவற்றுக்கும் 7-Eleven, AXS இயந்திரம், Sheng Siong $TM
பணம் அனுப்புங்கள்
Remit-ஐத் தேர்வு செய்யவும் > பெறுநரைத் தேர்வு
செய்யவும் > பணம் அனுப்பவும்
உங்கள் பரிவர்த்தனைப் பதிவுகளைப் பார்க்கவும்
'வரலாற்றைத்' தேர்ந்தெடுக்கவும்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Dash மூலம் இந்தியாவில் எங்கெல்லாம் பணத்தை அனுப்பலாம்?
பின்வரும் வங்கிகளில் உள்ள வங்கிக் கணக்கிற்கு நீங்கள் பணத்தை மாற்றலாம்:
- பாங்க் ஆஃப் பரோடா
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- பாரத ஸ்டேட் வங்கி
- ஆக்சிஸ் வங்கி லிமிடெட்
- பேங்க் ஆஃப் இந்தியா
- கனரா வங்கி
- பெடரல் வங்கி லிமிடெட்
- HDFC வங்கி லிமிடெட்
- ஐசிஐசிஐ வங்கி லிமிடெட்
- இந்தியன் வங்கி
- கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட்
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- சவுத் இந்தியன் வங்கி
- தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட்
- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
- யெஸ் பேங்க் லிமிடெட்
அல்லது, உள்ளூர் விதிமுறை வரம்புகளுக்கு உட்பட்டு, மனப்புரம் பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ் மற்றும் பிற நிறுவனங்கள் போன்ற, RBI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட பின்வரும் Western Union முகவர்களுக்குப் பணத்தை அனுப்பலாம்.
Dash மூலம் இந்தியாவிற்கு பணத்தை அனுப்புவதற்கான பரிவர்த்தனைக் கட்டணம் என்ன?
இந்தியாவிற்குப் பணத்தை அனுப்புவதற்கான பரிவர்த்தனைக் கட்டணம் ஒவ்வொரு பணம் எடுத்தல் இடத்துக்கும் வேறுபடும்.
ஒரு வங்கிக் கணக்கு மூலம் பணம் அனுப்புவதற்கு, ஒரு பரிமாற்றத்திற்கு SGD 3.50 என்ற நிலையான கட்டணம் பொருந்தும்.
ஒரு Western Union பணம் எடுத்தல் இடம் மூலம் பணம் அனுப்புவதற்கு, ஒரு பரிமாற்றத்திற்கு SGD 4.00 செலவாகும்.
நான் Dash மூலம் இந்தியாவிற்குப் பணம் அனுப்பும்போது பெறும் வெள்ளி-ரூபாய் நாணய மாற்று விலை என்ன?
Dash இல், முடிந்தவரை சிறந்த நாணய மாற்று விலைகளை உங்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். வெள்ளி-ரூபாய் நாணய மாற்று விலை சந்தை நிலைமைகளின் அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகிறது. உண்மையான நாணய மாற்று விலைகளைக் கண்டறிய, உங்கள் Dash செயலியைத் தொடங்கி, Remit என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவில் உள்ள பெறுநருக்குத் தொகை சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும்?
அடுத்த வணிக நாளுக்குள் வங்கிகளுக்கு பணம் அனுப்பப்படும். பயனர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்குவதற்கும், பணம் அனுப்பும் போது மோசடியை எதிர்த்துப் போராடுவதற்கும், சில பரிவர்த்தனைகள் 96 மணிநேரம் வரை காத்திருக்கும் நேரத்தைக் கொண்டிருக்கும்.
ஒரு Western Union பணம் எடுக்கும் இடத்திற்குப் பணத்தை அனுப்பினால், அது அங்கு 15 நிமிடங்களில் வந்து சேரும்.
நான் எப்படித் தொடங்குவது?
Dash செயலியைப் பதிவிறக்கம் செய்து முடித்தவுடன், செயலியினுள் ஒரு கணக்கைத் தொடங்கப்
பதிவுசெய்யவும்.
அது முடிந்தவுடன், நீங்கள் பணம் அனுப்புவதற்குப் பதிவுசெய்துகொள்ளலாம்; Dash செயலியினுள், பணம் அனுப்புங்கள்
> பணம் அனுப்பப் பதிவுசெய்யுங்கள்- என்பதைத் தேர்ந்தெடுக்கவும், அதன்பின்னர் தேவைப்படும் படிகளைப்
பின்பற்றி, சமர்ப்பிக்கவும்.
பணம் அனுப்புவதற்கு உங்கள் கணக்கு அனுமதிக்கப்படும்போது, பெறுநரைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுத்து, பணம்
அனுப்பத் தொடங்குங்கள்.
முகவரிக்கான சான்றாக என்னென்ன ஆவணங்களைப் பயன்படுத்தலாம்?
முகவரிச் சான்றுக்கான எடுத்துக்காட்டுகள்:
- Singtel, M1, Starhub விலைச்சீட்டு (bill)அல்லது வேறு ஏதேனும் தொலைத்தொடர்பு நிறுவன விலைச்சீட்டு (bill)
- வங்கி அறிக்கை
- ஊழியர் தங்கும் விடுதி அட்டை/அனுமதி அட்டை
- நிறுவனத்தின் அலுவற்கடிதத்தாளில் வாடிக்கையாளரின் முழுப் பெயருடன் கூடிய வேலைநியமனக் கடிதம்
- வீட்டு வாடகை ஒப்பந்தம்
- சிங்கப்பூர் அரசாங்க நிறுவனத்திடமிருந்து கடிதம் (எ.கா. மனிதவள அமைச்சு)
- தண்ணீர் அல்லது மின் கட்டண விலைச்சீட்டு (bill)
Western Union பணம் கைப்பெறுதல் (Cash Pick-up) முறை மூலம் பணம் அனுப்பும்போது, பணத்தைக் கைப்பெறுவதற்கான குறியீட்டை (Pickup Code) நான் எவ்வாறு பெறுவது?
உங்கள் பணம் அனுப்பும் செயல்முறை நிறைவடைந்ததும், உங்கள் Dash செயலியைத் திறந்து > “History” என்பதைத் தட்டவும் > நீங்கள் செய்த அந்தப் பணப் பரிமாற்றத்தைத் தேர்ந்தெடுக்கவும் > “Send pickup code” என்பதைத் தட்டவும் > உங்கள் குறுந்தகவலனுப்பும் செயலியைத் தேர்ந்தெடுக்கவும்; இப்போது நீங்கள் MTCN pickup code என்ற கைப்பெறுதல் குறியீட்டைக் காண்பீர்கள். பெறுநர் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக, இந்த MTCN pickup code குறியீட்டை அவர்களுக்கு அனுப்பிவைக்க மறவாதீர்.
மேலும், உங்கள் பணப் பரிமாற்றத்தை நிறைவு செய்ததும் நீங்கள் பெறும் SMS-ல், MTCN பணம்பெறல் குறியீட்டையும் நீங்கள் காணலாம்.
ரொக்கமாகக் கையில் பெற்றுக்கொள்ளும் வகையில் Western Union மூலம் பணம் அனுப்பப்படும்போது, எனது பெறுநர் பணத்தை எங்கே பெற்றுக்கொள்ளலாம்?
Western Union மூலம் பணத்தைப் பெற்றுக் கையளிக்கும் முகவர்களின் முழுப் பட்டியலைக் காண, westernunion.com/global-services/find-locations என்ற இணையதளத்திற்குச் செல்லவும்